/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என்.ஜி.என்.ஜி., பள்ளியில் மாணவர்களுக்கு பசுமை விருது
/
என்.ஜி.என்.ஜி., பள்ளியில் மாணவர்களுக்கு பசுமை விருது
என்.ஜி.என்.ஜி., பள்ளியில் மாணவர்களுக்கு பசுமை விருது
என்.ஜி.என்.ஜி., பள்ளியில் மாணவர்களுக்கு பசுமை விருது
ADDED : பிப் 23, 2025 11:59 PM
ஆனைமலை; ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளியில், மாணவர்களுக்கு பசுமை விருது வழங்கப்பட்டது.
ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளியின் தேசிய பசுமை படை சார்பில், மாணவர்களுக்கு 'பசுமை விருது' வழங்கும் விழா நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் கிட்டுச்சாமி தலைமை வகித்தார்.
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து பள்ளியில் படித்து வரும், 90 மாணவர்களுக்கு, அவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மரம் வளர்த்தல்; பறவைகளுக்கு வீடுகளில் தினமும் உணவு தண்ணீர் வைத்தல், நீர் சேமித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.
பயன்படுத்திய நீரை மீண்டும் பயன்படுத்துதல், மக்கும் கழிவு, மக்காத கழிவு என பிரித்தல்; மழை நீர் சேமித்தல் போன்ற சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொண்டனர். அவர்களது சேவையை பாராட்டி, பசுமை விருது வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
பொள்ளாச்சி கல்வி மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன், சேவாலயம் பொறுப்பாளர் முஸ்தபா, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பூவிழி ஆகியோர் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினர். தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.

