/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி தோட்டக்கலை அறிவுரை
/
பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி தோட்டக்கலை அறிவுரை
ADDED : பிப் 25, 2025 10:36 PM
கிணத்துக்கடவு,; தென்னையில், பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்ய வேண்டும், என, தோட்டக்கலைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடந்து வருகிறது. இதில், அங்கக கழிவு சுழற்சியை மேற்கொள்ள வேண்டும் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதில், சணப்பை, அவுரி, கலப்பகோனியம், தக்கைப்பூண்டு போன்ற பசுந்தால் உரங்களில் ஒன்றை பயிரிட்டு பூக்கும் தருணத்தில் உழவு செய்ய வேண்டும். சணப்பையை ஒரு வட்ட பாத்திக்கு, 50 கிராம் என்ற அளவில் விதைத்து பூக்கும் தருணத்தில் மண்ணோடு கலந்து விட வேண்டும்.
மேலும், தென்னை நார்கழிவு அல்லது தென்னை மட்டை வாயிலாக, தயாரிக்கப்பட்ட மண்புழு உரம் மற்றும் மக்கிய கழிவுகளை சுழற்சி செய்ய வேண்டும். இவ்வாறு, செய்தால் மரத்தில் சத்து அதிகரிக்கும் மற்றும் காய் பிடிப்பு அதிகமாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.

