/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூழல் விழிப்புணர்வுக்கு பசுமை மாரத்தான் போட்டி
/
சூழல் விழிப்புணர்வுக்கு பசுமை மாரத்தான் போட்டி
ADDED : ஜூன் 25, 2024 11:09 PM

கருமத்தம்பட்டி:உலக சுற்றுச்சூழல் மாதத்தை ஒட்டி, பசுமை மாரத்தான் போட்டி கருமத்தம்பட்டியில் நடந்தது.
கவுசிகா நீர் கரங்கள் மற்றும் அத்திகடவு கவுசிகா நதி மேம்பாட்டு சங்கம் சார்பில், உலக சுற்றுச்சூழல் மாதத்தை ஒட்டி, விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.
கருமத்தம்பட்டி கிட்டாம்பாளையம் கவுசிகா நதி அருகே நடந்த நிகழ்ச்சியில், போட்டியை, முக்கிய பிரமுகர்கள் துவக்கி வைத்தனர். கவுசிகா நீர் கரங்கள் நிறுவனர் செல்வராஜ் வரவேற்றார்.
போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் மேம்பாடு, நீர் நிலைகள் மேம்பாடு, பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பரிசளிப்பு விழாவில், இன்ஸ்பெக்டர் சண்முகவேலு, மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் சசிக்குமார், கிட்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் சந்திரசேகர், கராத்தே நடுவர் மனோகரன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ரத்தினம், ராம சிவசாமி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
பசுமை வனம் தன்னார்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். செல்வராஜ் நன்றி கூறினார்.