ADDED : ஜூலை 02, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:நிர்வாக காரணங்களால், குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறாது என, கோவை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி சார்பில், வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில், மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படும். கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளுக்கு, உடனடியாக அதிகாரிகள் வாயிலாக தீர்வு காணப்படும். இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம் நாளை (இன்று) நடைபெறாது என, மாநகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார். கடந்த வாரமும் குறைதீர்ப்பு நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.