/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்காச்சோளத்திற்கு பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
/
மக்காச்சோளத்திற்கு பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
மக்காச்சோளத்திற்கு பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
மக்காச்சோளத்திற்கு பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
ADDED : ஆக 02, 2024 06:08 AM
மேட்டுப்பாளையம்:
மக்காச்சோள பயிருக்கு நடப்பு காரிப்பருவத்தில், பயிர் காப்பீடு செய்யலாம் என வேளாண்மை துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி கூறியிருப்பதாவது:-
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், மக்காச்சோள பயிருக்கு நடப்பு காரிப்பருவத்தில், பயிர் காப்பீடு செய்யலாம். இயற்கை இடர்பாடுகளால், ஏற்படும் மகசூல் இழப்புகளில், இருந்து பாதுகாத்துக்கொள்ள பயிர் காப்பீடு அவசியம்.
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள், தங்களது ஆதார் நகல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலி பயிர் சாகுபடி அடங்கல், சிட்டா நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் நகல், பயிர் காப்பீடு செய்வதற்கான முன்மொழிவு விண்ணப்பத்துடன் கூடிய பதிவு விண்ணப்பம் மற்றும் உரிய பிரிமிய கட்டண தொகையை செலுத்தி, பொது சேவை மையங்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
மக்காச்சோள பயிருக்கு காப்பீடு செய்ய, செலுத்த வேண்டிய பிரிமியம், ஒரு ஏக்கருக்கு ரூ. 722 ஆகும். காப்பீட்டுத் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.36,100 ஆகும். வருமான இழப்பை தவிர்க்க, வரும் செப்டம்பர் 16ம் தேதிக்குள் மக்காச்சோள சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
---