/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாகாளியம்மன் கோவிலில் குண்டம், தேர் திருவிழா
/
மாகாளியம்மன் கோவிலில் குண்டம், தேர் திருவிழா
ADDED : மார் 14, 2025 11:01 PM

ஆனைமலை; ஆனைமலை அருகே மாகாளியம்மன் கோவிலில், குண்டம் தேர் திருவிழா நேற்று நடந்தது.
ஆனைமலை அருகே கோட்டூர் பழனியூர் மாகாளியம்மன் கோவிலில், குண்டம், தேர்த்திருவிழா கடந்த பிப்., மாதம், 25ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
நேற்று குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. 60 அடி நீளம் உள்ள குண்டத்துக்கு கோவில் பூஜாரி, பூஜைகள் செய்து முதலில், குண்டத்தில் பூ பந்து, எலுமிச்சை பழத்தை உருட்டி விட்டு இறங்கினர்.
விரதம் இருந்த, நுாற்றுக்கணக்கான பக்தர்கள், தாயே பராசக்தி என்ற கோஷத்துடன், குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.கோட்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தேர் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.