/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிதடி குற்றவாளி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது
/
அடிதடி குற்றவாளி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது
ADDED : ஏப் 28, 2024 02:10 AM

கோவை;தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை மாவட்டம், கோட்டூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், தொடர்ந்து அடிதடி மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த, கோட்டூர் பகுதியை சேர்ந்த அமுக்க மணி என்கிற மணிகண்டன், 36, என்பவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., பத்ரிநாராயணன், மாவட்ட கலெக்டர் கிராந்தி குமாருக்கு பரிந்துரை செய்தார். மணிகண்டன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
மணிகண்டனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்த வருடத்தில், இதுவரை கோவை மாவட்டத்தில், 22 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி., தெரிவித்தார்.

