/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுமார மடாலயத்தில் குரு வணக்க நாள்
/
கவுமார மடாலயத்தில் குரு வணக்க நாள்
ADDED : ஜூலை 24, 2024 11:46 PM

கோவை : சின்னவேடம்பட்டி கவுமார மடாலயத்தில், குரு வணக்க நாள் விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு, கலைவாணி கல்வி நிறுவனங்களின் இணை தாளாளர் குமாரசாமி தலைமை தாங்கினார். பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், செஞ்சேரி மலை நந்தவன திருமடம் முத்து சிவராமசாமி அடிகளார், நிலக்கிழார் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வணிக வரித்துறை முன்னாள் முதன்மை ஆணையர் ராமலிங்கம் பங்கேற்றார்.
விழாவில் குமரகுருபர சுவாமிகள் பேசுகையில், ''நமது இந்து சமயத்தின் சிறப்பை, உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும். தற்போது நமது சமயத்திற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருவதை நமது கண்முன் பார்த்து வருகிறோம்.
நமது மொழியையும் இழந்து வருகிறோம். இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவது வேதனை அளிக்கிறது. குரு என்பவர் மடாதிபதிகள் மட்டுமல்ல; ஆசிரியரும் குருதான். அடுத்த ஆண்டு கொங்கு நாட்டில் உள்ள அனைத்து மடாதிபதிகளையும் ஒருங்கிணைத்து, குரு வணக்க நாளை கொண்டாட வேண்டும்,'' என்றார்.

