/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண் ரோடு பாதி; தார் ரோடு மீதி :வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்
/
மண் ரோடு பாதி; தார் ரோடு மீதி :வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்
மண் ரோடு பாதி; தார் ரோடு மீதி :வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்
மண் ரோடு பாதி; தார் ரோடு மீதி :வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்
ADDED : மே 31, 2024 12:08 AM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, சென்றாம்பாளையம் - சூலக்கல் செல்லும் ரோடு ஆங்காங்கே சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர்.
கிணத்துக்கடவு, சென்றாம்பாளையத்தில் இருந்து சூலக்கல் செல்லும் ரோட்டில் நாள்தோறும் ஏராளமானோர் பயணிக்கின்றனர். இதில், பாதி தூரம் நன்றாக உள்ளது. சூலக்கல் ஊராட்சி தொடக்கத்தில் இருந்து, ரோடு ஆங்காங்கே சேதம் அடைந்து காணப்படுகிறது.
சில இடங்களில், பாதி மண் ரோடகவும், மீதி தார் ரோடாகவும் உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர். இந்த ரோட்டில் வளைவான பகுதிகளில், இரவு நேரத்தில் செல்லும் பைக் ஓட்டுநர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
மேலும், போதிய அளவு மின் விளக்கு வசதியும் இல்லாததால், நடந்து செல்பவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.