/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வெற்றியைப் போல் மகிழ்ச்சியும் முக்கியம்'
/
'வெற்றியைப் போல் மகிழ்ச்சியும் முக்கியம்'
ADDED : ஜூலை 22, 2024 01:19 AM

கோவை;மலுமிச்சம்பட்டி, ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் (எஸ்.என்.எம்.வி.,), 'சுவாஜித் 2024' என்ற முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, பி.எஸ்.ஜி., மருத்துவமனை இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன் பேசுகையில், ''பாரதியின் வரிகளுக்கேற்ப மனதில் உறுதியுடையவர்களாய் மாணவர்கள் இருக்க வேண்டும். உடல் மற்றும் மனம் அமைதியாக இருக்கும் போது, சிந்தனை சரியாக அமையும். இது, வாழ்வின் வெற்றிக்கு முக்கியமானது. வெற்றியைப் போல, மகிழ்ச்சியும் முக்கியம் என்பதை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
விழாவில், மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கல்லுாரியின் தலைவர் மஹாவீர் போத்ரா, துணைத்தலைவர் கமலே பாப்னா, முதல்வர சுப்பிரமணி, மேலாண்மைத்துறை இயக்குனர் முத்துக்குமார் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.