நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த, இரண்டு மாதங்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்றுமுன்தினம் இடைவிடாமல் பெய்த மழையால், நகரப்பகுதியில் உள்ள ரோடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகபட்சமாக பொள்ளாச்சி பகுதியில், 78 மி.மீ., மழை பதிவாகியது.
நேற்று காலை, 8:00 மணி வரையான மழையளவு நிலவரம் (மி.மீ.,) வருமாறு:
சோலையாறு அணை - 7, பரம்பிக்குளம் - 20, ஆழியாறு - 62.2, திருமூர்த்தி அணை - 38, அமராவதி - 15, வால்பாறை - 24, மேல்நீராறு - 26, கீழ்நீராறு - 49, காடம்பாறை - 75, வேட்டைக்காரன்புதுார் - 10, மணக்கடவு - 18, நவமலை - 13, நல்லாறு - 41, பல்லடம் - 4 என அளவில் மழை பெய்தது.

