/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெயிலின் தாக்கம் தணித்த சாரல் மழையால் மகிழ்ச்சி
/
வெயிலின் தாக்கம் தணித்த சாரல் மழையால் மகிழ்ச்சி
ADDED : மார் 11, 2025 10:13 PM
பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் பெய்த திடீர் சாரல் மழையால், சுட்டெரித்த வெயிலின் தாக்கம் தணிந்தது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், கடந்த 15 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும், மானாவாரியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் காய்ந்து வருகின்றன. கால்நடை மேய்ச்சல் நிலங்களில் இருந்த, புல், செடி, கொடிகள் காய்ந்ததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் முதல் லேசான சாரல் மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் தணிந்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
* வால்பாறையில் கடந்த ஐந்து மாதங்களாக மழைப்பொழிவு இல்லாத நிலையில், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. வறட்சியால் வனவிலங்குகள் தண்ணீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
எஸ்டேட் பகுதியில் தேயிலை செடிகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால், தெளிப்பான்கள் வாயிலாக தேயிலை செடிகளுக்கு தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக காலை, மாலை வேளையில் பனிப்பொழிவும், பகல் நேரத்தில் கடும் வெயிலும் நிலவவதால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.
இந்நிலையில், குளிர்விக்கும் வகையில் நேற்று பரவலாக சாரல்மழை பெய்தது. இதனால் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சியடைந்தனர்.