/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளிர்கால நோய்களை துரத்தும்... 'கர்கடக கஞ்சி' குடிச்சிருக்கீங்களா?
/
குளிர்கால நோய்களை துரத்தும்... 'கர்கடக கஞ்சி' குடிச்சிருக்கீங்களா?
குளிர்கால நோய்களை துரத்தும்... 'கர்கடக கஞ்சி' குடிச்சிருக்கீங்களா?
குளிர்கால நோய்களை துரத்தும்... 'கர்கடக கஞ்சி' குடிச்சிருக்கீங்களா?
ADDED : ஆக 03, 2024 09:58 PM

கேரள மாநிலத்தில் மழை தட்டியெடுக்கிறது. அங்கு இந்நாட்களில், 'அவுஷத கஞ்சி'(மருந்து கஞ்சி) எனப்படும் உணவு பிரபலம்.
சுடச்சுட குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். எளிதில் ஜீரணமாவதால், வயது வித்தியாசமின்றி அனைவரும் உறிஞ்சி குடிப்பர். பொதுவாக மழை பெய்யும் கர்கடக மாதத்தில்(ஆடி மாதம்) தயாரிப்பதால், இதை 'கர்கடக கஞ்சி' என்றும் அழைக்கின்றனர்.
இரவு உணவுக்கு மிகவும் ஏற்றது. மூட்டு வலியால் கஷ்டப்படுபவர்கள், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள், நீரிழிவு, சுவாச நோய், குளிர்கால நோய்களால் அவதிப்படுபவர்கள் இதை தயங்காமல் சாப்பிடலாம்.
அதெல்லாம் சரி....கோவையில் எங்கே கிடைக்கும்? கோவை குறிச்சிங் ஹவுசிங் யூனிட்டில் உள்ள தர்மசாஸ்தா கோவிலுக்கு போனால், போதும் போதும் என சொல்லும் அளவுக்கு ஊற்றுகின்றனர்.
கோவிலின் தலைமை ஆலோசகர் விஸ்வநாதன், ''கேரள மக்கள் இடைவிடாத மழை காலம், குளிர் காலங்களில் இந்த மருந்து கஞ்சியை உணவாக எடுக்கும் வழக்கத்தை பூர்வீகமாக கடைப்பிடித்து வருகின்றனர்,'' என்கிறார்.
''எப்படி தயாரிப்பது?''
''நல்ல கேள்வி....45 வகை மூலிகை, நவரச அரிசி, வெந்தயம், கொள்ளு, பாசிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து, தேங்காய் பாலில் கொதிக்க வைத்தால் ரெடி. தேவைக்கு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். சேர்க்காமலும் குடிக்கலாம். ஆடி மாதம் பக்தர்களுக்கு தினமும் வழங்கப்படுகிறது. குளிர்காலத்தில் உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடிய சிறந்த மருந்து இது,''.
''சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?''
''சர்க்கரை நோயாளிகள் இதனை குடித்தால், சர்க்கரை அளவு அதிகரிக்காது. இரவு நேரத்தில் சாப்பிட வேண்டும். இதனை சாப்பிட்ட பின் மற்ற உணவுகளை சாப்பிடக் கூடாது, தண்ணீர் கூட குடிக்கக்கூடாது. உடல் வலி, இடுப்பு வலி, கால் வலி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து. சளி, காய்ச்சலுக்கும் இது நல்லது,''
''கோவில்களில் மட்டும்தான் கிடைக்குமா?''
''இந்த ஆயுர்வேத கஞ்சி, கேரளாவில் அனைத்து கோவில்களிலும் வழங்கப்படுகிறது. வீடுகளிலும் தயாரித்து சாப்பிடுகின்றனர். தமிழகத்தில் ஐயப்பன் கோவில்களில் வழங்கப்படுகிறது. ஆடி மாதத்தின் கடைசி மூன்று நாட்கள் 'முக்குடி' என்ற ஆயுர்வேத மருந்து, பக்தர்களுக்கு வழங்கப்படும். அனைத்து வயதினருக்கும், அனைத்து நோயாளிகளுக்கும் இது சிறந்தது.