/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடையின் பூட்டை உடைத்து ரூ. 80 ஆயிரம் திருட்டு
/
கடையின் பூட்டை உடைத்து ரூ. 80 ஆயிரம் திருட்டு
ADDED : ஆக 08, 2024 10:56 PM
கோவை:ரேஸ்கோர்ஸில் கடைக்குள் புகுந்து ரூ.80 ஆயிரத்து, 600 ரொக்கத்தை திருடியவர்களை போலீசார் தேடுகின்றனர்.
கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார்,40. இவரும், இவருடைய மூத்த சகோதரரும் தந்தையின் கடையை கவனித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி இரவு, 8:30 மணிக்கு கடையை பூட்டிவிட்டு இருவரும் வீடு சென்றனர்.
மறுநாள் அதிகாலை, 3:00 மணிக்கு கடையின் 'செக்யூரிட்டி' மனோஜ்குமாரை மொபைல் வாயிலாக தொடர்புகொண்டு, மர்ம நபர் ஒருவர் கடை கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து திருடிச்சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடைக்கு விரைந்த மனோஜ் குமார் உள்ளே சென்று பார்த்தபோது ரூ.80 ஆயிரத்து, 600ஐ கல்லாவில் இருந்து திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, ரேஸ்கோர்ஸ் போலீசில் மனோஜ்குமார் புகார் அளிக்க, கைரேகை, 'சிசிடிவி' காட்சி பதிவுகள் உள்ளிட்டவை கொண்டு விசாரணை நடந்துவருகிறது.