/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொரோனாவுக்குப் பிறகு உடல்நலம் தாறுமாறு; சித்த மருத்துவத்தில் இருக்கிறது சிறந்த தீர்வு!
/
கொரோனாவுக்குப் பிறகு உடல்நலம் தாறுமாறு; சித்த மருத்துவத்தில் இருக்கிறது சிறந்த தீர்வு!
கொரோனாவுக்குப் பிறகு உடல்நலம் தாறுமாறு; சித்த மருத்துவத்தில் இருக்கிறது சிறந்த தீர்வு!
கொரோனாவுக்குப் பிறகு உடல்நலம் தாறுமாறு; சித்த மருத்துவத்தில் இருக்கிறது சிறந்த தீர்வு!
ADDED : மே 26, 2024 12:50 AM

நாட்டையே உலுக்கிய கொரோனா அலை சற்று ஓய்ந்திருந்தாலும், உடல் அரிப்பு, அலர்ஜி, தோல் கருமையடைதல், மாரடைப்பு, ஸ்டிரோக், முடி உதிர்தல், மூட்டு வலி, சோர்வாக இருத்தல் என பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர்.
சித்த மருத்துவத்தில் உள்ள, சில மருத்துவ முறைகளைக் கடைப்பிடித்தால் இந்த எல்லா பிரச்னைகளுக்கும், 'பை பை' சொல்லலாம் என்கிறார், பிரபல சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி.
ஆவாரம்பூ குடிநீர்
சர்க்கரை நோய், அதிக உடல் எடை, ஹைப்பர் டென்சன், சிறுநீரகம், குடல் பிரச்னை இருப்பவர்களுக்கு, ஆவாரம்பூ குடிநீர் உதவியாக இருக்கும். இது, ரத்த ஓட்டத்தை சீராக்கும். ஒரு கைப்பிடி அளவு ஆவாரம் பூவை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி 48 நாட்கள் தொடர்ந்து தினமும், காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தால், காயகல்பம் போல சிறந்த குணம் தரும்.
அருகம்புல் கற்கம்
பூச்சிக்கடி, அலர்ஜி, அரிப்பு, படை, வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு அருகம்புல் நல்ல பலனைத் தரும். அருகம்புல் கைப்பிடி அளவு, மிளகு 10 சேர்த்து அரைத்த கற்கம் 1 ஸ்பூன் அளவு அல்லது பிளிந்த 30 மில்லி சாற்றை, மாதத்தில் 5 நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். நாள்பட்ட அலர்ஜி பிரச்னைக்கு, வாரத்துக்கு ஒருமுறை மூன்று மாதங்கள் எடுக்கலாம்.
கீழாநெல்லி சாறு
கொரோனாவுக்குப் பிறகு, கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. கீழாநெல்லிக் கீரையை அரைத்து வடிகட்டி, 30 மில்லி அளவுக்கு மாதத்தில் 5 நாட்கள் மட்டும் காலை வேளையில் எடுத்து வரலாம். இது கல்லீரலைப் பாதுகாக்க உதவும்.
திரிகடுகு சூரணம்
குளிர்காலத்தில் வரும் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை கரகரப்பு, கை, கால் வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, திரிகடுகு சூரணத்தைப் பயன்படுத்தலாம். ஐந்து நாட்கள் அரை ஸ்பூன் 2 வேளை தேன் அல்லது வெந்நீருடன் எடுக்கலாம். ஆங்கில மருந்துகள் எடுப்பவர்களும் கூட, இந்த சூரணத்தைப் பயன்படுத்தலாம்.
மூக்கிரட்டை குடிநீர்
மூக்கிரட்டை சூரணத்தை ஒரு ஸ்பூன் அளவு ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி காலை வெறும் வயிற்றில் பருகி வந்தால், சிறுநீரகம் பாதுகாப்பாக இருக்கும்.
அகத்திக்கீரை
வயிறு மற்றும் குடலை, சுத்தம் செய்வதில் அகத்திக்கீரை பெரும் பங்கு வகிக்கிறது. பொறியல், சாம்பார், மசியல் என 15 நாட்களுக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ளலாம். குடல் கழிவுகளை வெளியேற்ற இது உதவும்.
இவ்வாறு, டாக்டர் அபிராமி கூறினார்.
இவரை, 96000 10696 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.