/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல் சுகாதாரத்துறையினர் ஏற்பாடு
/
குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல் சுகாதாரத்துறையினர் ஏற்பாடு
குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல் சுகாதாரத்துறையினர் ஏற்பாடு
குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல் சுகாதாரத்துறையினர் ஏற்பாடு
ADDED : பிப் 10, 2025 05:50 AM
தேசிய குடற்புழு நீக்கும் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில், வரும், 10 மற்றும் விடுபட்ட குழந்தைகளுக்கு, வரும் 17 ம் தேதி குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், மாவட்டத்தில், ஒரு வயது முதல், 19 வயது வரை உள்ள சுமார், 5.6 லட்சம் குழந்தைகள் மற்றும், 20 முதல், 30 வயது வரை உள்ள, 2.5 லட்சம் பெண்களுக்கு, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, மற்றும் சுகவீனம், படிப்பில் கவனமின்மை, பசியின்மை, ரத்தசோகை, குமட்டல், வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
குடற்புழு தொற்றிலிருந்து விடுபட, 'அல்பெண்டசோல்' மாத்திரைகளை உட்கொள்வது அவசியமாகும். காலை அல்லது மதியம் உணவு உண்டபின் அரை மணிநேரம் கழித்து, இம்மாத்திரைகள் உட்கொள்ளவேண்டும்.
இதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. இம்மாத்திரைகள் மாவட்டத்தின் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு பள்ளி, கல்லுாரிகளில் வழங்கப்படுகிறது.
எனவே குழந்தைகள் மற்றும், 20 முதல், 30 வயதுடைய பெண்கள் இம்மாத்திரையை உட்கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு, தெரிவித்தனர்.
குடற்புழுக்களை தடுக்க, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இன்று மாத்திரை வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இன்று, முகாம் நடத்தப்படுகிறது. இதன் வாயிலாக, ஒரு லட்சத்து, 77 ஆயிரம் பேர் பயனடையவும் உள்ளனர். இம்மாத்திரைகள் அனைத்து ஆரம்ப, துணை சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில், ஒன்று முதல் 19 வயது வரை 23,055 பேர், 20 முதல் 30 வயதுடைய 4,040 பெண்கள்; தெற்கு ஒன்றியத்தில், 1 முதல் 19 வயது வரை, 24,952 பேர்; 20 வயது முதல் 30 வயதுடைய 10,486 பெண்கள்; வடக்கு ஒன்றியத்தில், ஒன்று முதல் 19 வயது வரை 23,728 பேர், 20 முதல் 30 வயது வரை 9,350 பெண்களுக்கு மாத்திரை வழங்கப்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
-- நிருபர் குழு -