/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழுநோய் கண்டறியும் பணி சுகாதார துறையினர் ஏற்பாடு
/
தொழுநோய் கண்டறியும் பணி சுகாதார துறையினர் ஏற்பாடு
ADDED : பிப் 24, 2025 09:35 PM

பொள்ளாச்சி, ; ஆனைமலை சுற்றுப்பகுதியில், தொழுநோய் பாதிப்பில் உள்ளவர்களை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தில், பொது சுகாதாரத்துறை வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடு வீடாகச் சென்று, தொழுநோய் பரிசோதனை கணக்கெடுப்பு பணியும் மேற்கொள்ளப்படுகிறது.
அவ்வகையில், ரமணமுதலிபுதுார், குமரன்கட்டம், காளியாபுரம் பிரிவு, மாரப்பகவுண்டன்புதுார், பெரியபோது ஆகிய கிராமங்களில், தொழுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.
மேலும், வட்டார மருத்துவம் சாரா மேற்பார்வையாளர்கள் செல்லத்துரை, கிருஷ்ணன், கோவிந்தன், முரளி, காளிங்கராஜ், மாவட்ட நற்கல்வியாளர் ராஜ்குமார் அடங்கிய குழுவினர், தொழுநோய் பாதிப்பில் உள்ளவர்களைக் கண்டறியும் பணியும் ஈடுபட்டனர்.
சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், பாலசுப்ரமணியன், மனோ, திருமலை ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கணக்கெடுப்பு பணி வரும், 28ம் தேதி வரை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.