/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையால் ரோடுகளில் பெரும் பள்ளம் விபத்துக்கு உள்ளாகும் வாகனங்கள்
/
மழையால் ரோடுகளில் பெரும் பள்ளம் விபத்துக்கு உள்ளாகும் வாகனங்கள்
மழையால் ரோடுகளில் பெரும் பள்ளம் விபத்துக்கு உள்ளாகும் வாகனங்கள்
மழையால் ரோடுகளில் பெரும் பள்ளம் விபத்துக்கு உள்ளாகும் வாகனங்கள்
ADDED : மே 28, 2024 12:08 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி பகுதியில் தொடர்ந்து பெய்யும் மழையால், நகரப்பகுதியில் உள்ள ரோடுகள், மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளன.
பொள்ளாச்சி நகரில், பல கி.மீ., நீளும் ரோடுகள், நகராட்சி நிர்வாக பராமரிப்பில் உள்ளன. அவ்வப்போது பெய்து வரும் மழையால், தார் ரோடுகளில் ஜல்லிகள் பெயர்ந்து பள்ளங்களாக மாறி வருகினறன.
பல இடங்களில் சேதம் ஏற்பட்டு, கரடுமுரடாக மாறியுள்ளது. இது ஒருபுறமிருக்க, கோவை, உடுமலை, பாலக்காடு, வால்பாறை, திருப்பூர் செல்லும் நெடுஞ்சாலையின் நடுவே படியும் மண் குவியலால், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.
அவ்வப்போது, சில ரோடுகளில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், தரமற்ற பணியால், சிறு மழைக்கு கூட ரோடு தாக்குப்பிடிக்காமல், மீண்டும் பள்ளங்கள் ஏற்பட்டு வருகிறது. முறையாக, 'பேட்ச் ஒர்க்' செய்யப்படுவதும் கிடையாது.
ராஜாமில் ரோடு, சத்திரம் வீதி, பத்ரகாளியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் இத்தகைய நிலை நீடிக்கிறது. குறிப்பாக, தேர்முட்டியில் இருந்து தெப்பக்குளம் வீதி நோக்கிய வழித்தடத்தில் பெரும் பள்ளங்கள் காணப்படுகின்றன. மேலும், பாலத்தின் ஒரு பகுதியில் பிளவும் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம் தேங்கி நிற்கும் போது, வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. ரோடுகளை விரைந்து சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மக்கள் கூறியதாவது:
கனமழை பெய்தால், வெள்ளம் வழிந்தோடுவதற்கான நீர்வழித்தடங்கள் காணாமல் போய்விட்டது. இதனால், ரோட்டில் வழிந்தோடும் வெள்ளம், மண் அரிப்பை ஏற்படுத்துகிறது.
வாகன போக்குவரத்துள்ள வீதிகள், குறுக்கு வீதிகளிலும், ரோடுகள் படுமோசமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ரோடுகளை புதுப்பித்து, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.