/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை; சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு

ADDED : ஜூன் 27, 2024 06:13 AM

கோவை : சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 120 மி.மீ., மழை பதிவாகியுள்ளது; நீர் மட்டம், 14.53 அடியாக உயர்ந்திருக்கிறது.
கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு காணப்படுகிறது. இதன் காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவாகியிருக்கிறது.
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 120 மி.மீ., மழை பதிவாகியிருக்கிறது. அடிவாரத்தில், 60 மி.மீ., மழை பெய்துள்ளது.
மழையின் காரணமாக, அணையின் நீர்மட்டம், 14.53 அடியாக உயர்ந்துள்ளது. ஒரு வாரத்துக்கு மிதமானது முதல் கன மழை வரை பெய்ய, வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்க கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில், கடந்த இரு தினங்களாக மழை இருந்து வருகிறது. இதன் காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குனியமுத்துார் அணைகட்டில், வெள்ளநீர் அதிகளவு வந்தது. கோவை குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.