/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பலத்த காற்றுடன் பெய்த கனமழை; வலுவிழந்த மரங்கள் சாய்ந்தன
/
பலத்த காற்றுடன் பெய்த கனமழை; வலுவிழந்த மரங்கள் சாய்ந்தன
பலத்த காற்றுடன் பெய்த கனமழை; வலுவிழந்த மரங்கள் சாய்ந்தன
பலத்த காற்றுடன் பெய்த கனமழை; வலுவிழந்த மரங்கள் சாய்ந்தன
ADDED : ஜூலை 25, 2024 10:36 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மக்கள் திணறினர்.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கடந்த இரு வாரங்களாக பருவமழையின் தாக்கம் குறையாமல் உள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடரும் மழையால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர் என, பலரும் பாதிக்கின்றனர்.
ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தென்னை மற்றும் காய்கறி சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், நேற்று மதியம், திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. தென்மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி பலத்த வேகத்தில் காற்று வீசியதால் பல்வேறு இடங்களில், மரக்கிளைகள் முறிந்து விழுந்து, மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.
மேலும், பல்வேறு வழித்தடங்களில், சாலையொரத்தில் இருந்த மரங்களில் இருந்து கிளைகள் ஒடிந்து விழுந்ததால், தங்களது வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி மக்கள் பயணத்தை தவிர்த்தனர். பல இடங்களில், வலுவிழந்த மரங்கள் ரோட்டில் சாய்ந்ததன.
கோவை ரோடு, சேரன் நகர் பகுதியில், சாலையோரம் இருந்த மரம் ஒன்று, திடீரென வேருடன் சாய்ந்து கீழே விழுந்தது. சாலையின் நடுவே மரம் விழுந்ததால், போக்குவரத்து தடைபட்டது. மின் இணைப்பு கம்பிகள் துண்டானதால், உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து, மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள், மக்களுடன் ஒன்றிணைந்து, மரத்தை அறுத்து அகற்றினர். இதனால், 45 நிமிடத்திற்கு பின், அவ்வழித்தடத்தில் போக்குவரத்து சீரானது.

