/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: நொய்யல் ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்
/
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: நொய்யல் ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: நொய்யல் ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: நொய்யல் ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்
ADDED : ஜூலை 30, 2024 11:10 PM

தொண்டாமுத்தூர்:கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக, கனமழை பெய்து வருகிறது. இதனால், இம்மாத துவக்கத்திலிருந்தே, சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதோடு, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீரோடைகளிலும், நீர் ஆர்ப்பரித்து வருவதால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, மேற்கு தொடர்ச்சி மலையில், பலத்த காற்றுடன், இடைவிடாமல் தொடர் கன மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் காலை, 8:00 மணி முதல் நேற்று காலை, 8:00 மணி வரை நிலவரப்படி, சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில், 162 மி.மீ., மழைப்பதிவாகியுள்ளது. இம்மாதத்தில், இதுவே அதிகப்படியான மழைப்பதிவாகும். சிறுவாணி அடிவாரத்தில், 85 மி.மீ., மழையும், தொண்டாமுத்தூரில், 48 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக, நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. நொய்யால் ஆற்றின் முதல் தடுப்பணையான, சித்திரைச்சாவடி தடுப்பணையில் இருந்து, வினாடிக்கு, 1,450 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வாய்க்காலில், 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.