ADDED : ஆக 21, 2024 11:45 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பொள்ளாச்சியில், 185வது உலக புகைப்பட தினத்தையொட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம், தமிழ்நாடு போட்டோ, வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கம், தமிழ்நாடு போலீஸ் டிராபிக் வார்டன்கள் சார்பில் ெஹல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், பேரணியை துவக்கி வைத்தார். டிராபிக் வார்டன் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போட்டோ, வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்க மாநில பொருளாளர் சரவணன், பொள்ளாச்சி தலைவர் மதன கோபால், செயலாளர் ஜியாவுதீன், பொருளாளர் ராமராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் துவங்கிய பேரணி, கோவை ரோடு, காந்தி சிலை, பஸ் ஸ்டாண்ட், உடுமலை ரோடு வழியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவடைந்தது.
பொள்ளாச்சி மோட்டார் சைக்கிள் கிளப் பல்வேறு வாகனங்களின் டீலர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள், கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பேரணியில், ெஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உடுமலை, ஆக. 22-
கிராமங்களில், அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், விற்பனையும், பயன்பாடும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழக அரசு, ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு, கடந்த, 2019, ஜன., மாதத்தில், தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. தடை குறித்து, விளம்பரப்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களிலும், 'நெகிழி இல்லாத வளாகம்' என்ற அடையாளப் பலகை வைக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது.
அதன்பின், கிராமங்களில், ஊரக வளர்ச்சித்துறை உத்தரவு அடிப்படையில், ஒன்றிய, ஊராட்சி நிர்வாகத்தினர், குறிப்பிட்ட இடைவெளியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தனர்.
இப்பணிகளில் தொய்வு ஏற்பட்டு, கடந்த இரு ஆண்டுகளாக, கிராமங்களில், பிளாஸ்டிக் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, குடிமங்கலம் ஒன்றிய கிராமப்புற நீர்நிலைகளிலும், ரோட்டோரங்களிலும், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், இக்கழிவுகள் தனியாக பிரித்தெடுத்து, மறு சுழற்சிக்கு அனுப்பும் திட்டமும் செயல்பாட்டில் இல்லை. இதனால், மண் வள பாதிப்பு; சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பிரச்னைகள் கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம், இதில் கவனம் செலுத்தி, கிராமங்களில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க, குறிப்பிட்ட இடைவெளியில், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.