/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனி, கொடிசியாவில் இருந்து சிறப்பு பஸ் இயக்க கோரிக்கை
/
இனி, கொடிசியாவில் இருந்து சிறப்பு பஸ் இயக்க கோரிக்கை
இனி, கொடிசியாவில் இருந்து சிறப்பு பஸ் இயக்க கோரிக்கை
இனி, கொடிசியாவில் இருந்து சிறப்பு பஸ் இயக்க கோரிக்கை
ADDED : நவ 06, 2024 11:46 PM
கோவை ; நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சிறப்பு பஸ்களை கொடிசியாவில் இருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வதென்றால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக வேண்டிய நிலை இருந்தது. சில ஆண்டுகளாக பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. தீபாவளிப் பண்டிகை அக்., 31ல் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம், 2,495 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என, போக்குவரத்துக் கழகம் அறிவித்திருந்தது.
திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கரூர் மார்க்கமாக சென்றவர்கள் அதிகளவிலான கஷ்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது. இம்மார்க்கத்தில் சென்ற பஸ்கள் சூலுாரில் இருந்து புறப்பட்டது அவர்களின் மொத்த இன்னல்களுக்கு காரணம்.
பயணிகள் கூறுகையில்,'தஞ்சாவூர் செல்ல, வடவள்ளியில் இருந்து காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்தோம். இங்கிருந்து சிங்காநல்லுார் சென்று, அங்கிருந்து சூலுார் சென்றோம். குழந்தைகள், லக்கேஜ்களுடன் மூன்று பஸ் ஸ்டாண்ட்கள் மாறிச் செல்வதற்குள் ஊருக்கு போகும் எண்ணமே மாறிவிட்டது. சூலுாருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும் அவற்றில் போதிய இடமில்லை. சில ஆண்டுகளுக்கு முன் கொடிசியாவில் சிறப்பு பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்தப்பட்டது. அது வசதியாக இருந்தது. நடுத்தர மக்கள் செல்லும் பஸ்களை தொலைதுாரத்தில் இருந்து இயக்கிவிட்டு, ஆம்னி பஸ்களை கொடிசியாவில் இருந்து இயக்கியது எந்த வகையில் நியாயம். வரும் காலத்தில் கொடிசியாவில் இருந்து பஸ்களை இயக்க வேண்டும்' என்றனர்.