/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னணி நிறுவனங்களில் இதோ வேலைவாய்ப்பு
/
முன்னணி நிறுவனங்களில் இதோ வேலைவாய்ப்பு
ADDED : மே 26, 2024 05:18 AM

கோவை : மலுமிச்சம்பட்டி, ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா (எஸ்.என்.எம்.வி.,) கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வேலைவாய்ப்புத்துறை சார்பில், பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு அரசின் கோவை மாவட்ட தொழில் வழிகாட்டுதல் மையத்தின் துணை இயக்குனர் கருணாகரன் கலந்துகொண்டார்.
அவர், ''பல்வேறு துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. தனித்திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்வதன் மூலம், வேலைவாய்ப்புகள் தேடி வரும்,'' என்றார்.
தொடர்ந்து, இறுதியாண்டு பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் 726 பேருக்கு முன்னணி நிறுவனங்களின் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கல்லுாரி முதல்வர் சுப்பிரமணி, பணிநியமன ஆணைகள் பெற்றமாணவர்களை வாழ்த்தினார். கல்லுாரியின் வேலைவாய்ப்புத் துறை அதிகாரி தினேஷ் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.