தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'இங்கே நான் தான் கிங்கு'

'இங்கே நான் தான் கிங்கு'

'இங்கே நான் தான் கிங்கு'


ADDED : மே 18, 2024 11:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2024 11:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கல் சூழ்ந்த வாழ்க்கை... மனதில் பல பாரங்களை சுமந்துக் கொண்டு, கூட்ஸ் வண்டி பயணம் போல தொடர் ஓட்டம்... பணியை முடிக்க காலக்கெடு, சம்பளம் கிடைத்த சில நாட்களுக்குள் ஞாபகப்படுத்தும் கடன் தொகை, மன உளைச்சல்... இன்ன பிற காரணங்கள், சில வேளைகளில் வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும், உள்ளுக்குள் புகைந்துக் கொண்டிருக்கும் எதிர்கால எதிர்பார்ப்பு.

குழந்தைகளாக இருந்திருந்தால், எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும் வாழ்க்கை. இப்படியும் நினைப்பதுண்டு.

சமீபத்தில், ஏ.ஜே.கே., கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கான போட்டி நடந்தது. 'மேடைக்கு வாங்க...' என்று, அழைத்ததும், துள்ளி ஓடினர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்.

பெரியவர்களிடம் மறந்து போன, மறைந்து போன சிரிப்பு அங்கே மீண்டும் உயிர் பெற்றது. இந்த உலகம் எனக்காக படைக்கப்பட்டது என்ற உணர்வு, வாழ்க்கையை ரசிக்க வேண்டும் என்று குழந்தைகள் நிகழ்த்திய பாடம், இதை ஆழ்ந்து ரசித்தவர்களுக்கு புரிந்திருக்கும்.

ஆனால், குழந்தைகள் மனதிலும் இப்போது சுமையை ஏற்றி விட்டு விட்டோமே... என்ன செய்வது. நன்றாக படித்தால் தான், அவர் மாதிரி வர முடியும் என்று, சமூகத்தில் உச்சத்தில் இருப்பவர்களை காண்பித்து வளர்க்க துவங்கி விட்டோம்.

பள்ளி விடுமுறையில் கூட, சிறப்பு வகுப்புகளில் குழந்தைகளை சேர்த்து விடுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அனைத்து திறனும் தன் குழந்தைகளுக்கு வர வேண்டும் என்று, ஆர்வம் காட்டுகின்றனர் பெற்றோர் பலர்.

சந்தோஷம், ஓய்வு, குடும்பத்துடனான பிணைப்பு குறைந்து போய், மதிப்பெண் தான் முக்கியம் என்ற சொல்லாடல், வீட்டு வாசலை தாண்டி, சமூகத்திலும் எதிரொலிக்க துவங்கி விட்டது.

இன்று ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு... நாளை மற்றொன்று. மாறிக் கொண்டே இருக்கிறது காலம். இருக்கும் படிப்புகளுக்கெல்லாம் எதிர்காலம் இருக்கத்தான் செய்கிறது. கூடுதலாக திறன் மேம்பாடு. திறமையை வெளிப்படுத்துபவர்களுக்கு தான், உலகம் சிவப்பு கம்பளம் விரிக்கிறது.

அதற்கு... குழந்தைகளை, குழந்தைகளாக இருக்க விட வேண்டும். நமக்கு தெரியாத பல விஷயங்களை இவர்களிடம் கற்க முடியும். நம் குழந்தைகளை விட, நாம் சேர்த்து வைத்த பொருளாதாரம் பெரிதாக இருந்து விட முடியாது.

முதுகுக்கு பின்னால் செய்யக்கூடிய மிகப்பெரிய காரியம், குற்றம் சொல்வதல்ல... தட்டிக் கொடுப்பது. அதை செய்வோம். பாதை காட்டுங்கள். குழந்தைகள் நடந்து செல்லும் போது, அது புதிய பாதையாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us