/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்கம் விலை தொடர்ந்து 'தகதக' சங்கம் சொல்லும் காரணம் இதோ!
/
தங்கம் விலை தொடர்ந்து 'தகதக' சங்கம் சொல்லும் காரணம் இதோ!
தங்கம் விலை தொடர்ந்து 'தகதக' சங்கம் சொல்லும் காரணம் இதோ!
தங்கம் விலை தொடர்ந்து 'தகதக' சங்கம் சொல்லும் காரணம் இதோ!
ADDED : ஆக 19, 2024 12:31 AM
கோவை:மத்திய அரசு சமீபத்தில், தங்கத்தின் இறக்குமதி வரியை குறைத்தும், பல்வேறு காரணங்களால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மத்திய பட்ஜெட் அறிவிப்பில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதனால், 4000 ரூபாய் வரை தங்கம் விலை குறையும் என, வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதே போல், அடுத்த சில தினங்கள், 2,500 ரூபாய் வரை, தங்கம் விலை குறைவாக இருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை மீண்டும் உயரத்துவங்கியுள்ளது.
தங்க நகை தயாரிப்பாளர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறுகையில், ''மத்திய அரசு வரி குறைத்து சில நாட்கள் தங்கம் விலை குறைவாக இருந்தது.
ஆனால், இஸ்ரேல்-ஈரான் போர், அமெரிக்கா பெட் வட்டி விகிதம் குறையும் என்ற வதந்தி, சீன மக்கள் மீண்டும் தங்கம் வாங்கி குவிக்க துவங்கியது போன்ற காரணங்களால், உலக சந்தையில் விலையேற்றம் தொடர்கிறது.
இதனால், மத்திய அரசு குறைத்த இறக்குமதி வரி பலனை, மக்களால் அனுபவிக்க முடியவில்லை. மத்திய அரசு வட்டியை குறைக்காமல் இருந்து இருந்தால், இன்று விலை, 56,500 ரூபாயாக இருந்து இருக்கும். இனி, தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை,'' என்றார்.