/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பரம்பரை அறங்காவலர்கள் நலசங்கம் உதயம்
/
பரம்பரை அறங்காவலர்கள் நலசங்கம் உதயம்
ADDED : மே 24, 2024 01:30 AM

கோவை;கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட திருக்கோவில் களின் பரம்பரை அறங்காவலர்கள் நலச்சங்கம் உதயமானது. இதன் ஆரம்ப கட்ட நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் சங்கத் தலைவர் தலைவர் கிருஷ்ணசாமி பேசியதாவது: -பரம்பரை அறங்காவலர் குழு; அரசு மற்றும் பக்தர்களின் நலன் கருதி பல்வேறு ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் தான் இப்புதிய சங்கம் துவங்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுக்க உள்ள கோவில்களுக்கு அரசு மிகப்பெரிய அளவில் திருப்பணிகள் செய்து வருகிறது. அதற்கு உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருந்து நாங்கள் முழுமையாக செயலாற்றுவோம்.
அதே சமயம் எங்களது குறைகளையும் அரசுக்கு தெரிவிப்பதற்கு வாய்ப்பாக இச்சங்கம் அமையும் என்று நினைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல முன்னாள் இணை ஆணையாளர் செந்தில் வேலவன், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமகிருஷ்ணன் உடப்ட பலர் பங்கேற்றனர்.