/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈஷாவில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது வழக்கு பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு
/
ஈஷாவில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது வழக்கு பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு
ஈஷாவில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது வழக்கு பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு
ஈஷாவில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது வழக்கு பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 10, 2024 10:38 PM
தொண்டாமுத்தூர்:கோவை, முட்டத்துவயலில் உள்ள ஈஷா யோகா மைய வளாகத்தில், ஈஷா அறக்கட்டளை சார்பில், மின்சார தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில், சுப்ரமணியன் என்பவர், இந்த தகனமேடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னதாக, இந்த மின் மயான கட்டுமான பகுதிக்குள், தொடர்பு இல்லாத நபர்கள் யாரும் நுழைய கூடாது என, கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஜூன் 14ல், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் என்ற அமைப்பினர், தன்னிச்சையாக, உண்மை கண்டறியும் குழு என்ற பெயரில், ஈஷாவிற்குள் செல்ல முயன்றனர்.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்தி தாக்கியதாக, தந்தை பெரியார் திராவிட கழக ராமகிருஷ்ணன் என்பவர், ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார்.
அதே நேரம், ஈஷாவிற்குள் நுழைய முயன்றவர்களை தடுத்தபோது, தங்களை தாக்கியதாக, 5 கிராம பொதுமக்கள் புகார் அளித்தனர். அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், ஈஷா தன்னார்வலர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு, நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா மின் மயான கட்டுமான பகுதிக்குள், நீதிமன்ற உத்தரவை மீறி உள்ளே நுழைய முயன்ற, தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நபர்கள் மீது, வழக்கு பதிவு செய்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க, காவல்துறைக்கு உத்தரவிட்டது.
மேலும், எந்த அதிகாரத்தின் அடிப்படையில், ஈஷாவிற்குள் நுழைந்தனர் என்றும் கேள்வி எழுப்பிய கோர்ட், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் நடவடிக்கை குறித்து, நீதிபதி கேள்வி எழுப்பியது.