/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கைநிறைய சம்பளம் தரும் சி.ஏ., படிப்புகள்'
/
'கைநிறைய சம்பளம் தரும் சி.ஏ., படிப்புகள்'
ADDED : மார் 25, 2024 01:22 AM

கோவை;'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில், 'சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்' எனப்படும் சி.ஏ., படித்தவர்களுக்கு, வாய்ப்புகள் உள்ளன, என தென்னிந்திய பட்டய கணக்காளர் அமைப்பின் அதிகாரி ராஜேந்திரகுமார் கூறினார்.
அவர் கூறியதாவது:
பிளஸ் 2 முடித்து நேரடியாகவும், இளநிலை பட்டம் பெற்ற பின்பும், சி.ஏ., படிப்பில் சேர்ந்து படிக்கலாம். பிளஸ்2 முடித்து நேரடியாக வரும் மாணவர்கள், 'பவுண்டேஷன்' எனப்படும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்.
இளநிலை முடித்து வருபவர்களுக்கு, இந்நுழைவுத்தேர்வு இல்லை. அதை தொடர்ந்து, 'இன்டர்மீடியட்' தேர்வை எதிர்கொண்டு, ஆடிட்டரிடம் நேரடியாக இரண்டு ஆண்டு பயிற்சி மேற்கொண்டு பின்னர், இறுதி தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்.
பட்டம் முடித்து வருபவர்கள், வணிகவியல் பிரிவாக இருப்பின், 55 சதவீத மதிப்பெண்களும், வணிகவியல் அல்லாத பிற பாடங்களை சேர்ந்தவர்கள், 60 சதவீத மதிப்பெண்களையும் பெற்று இருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு முடித்ததுமே பதிவு செய்து கொண்டு, நுழைவுத்தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ளலாம். பணிபுரிந்து கொண்டேவும், வீட்டில் இருந்தபடியே இப்படிப்பை படிக்க இயலும்.
'சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்' தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறிய நிறுவனங்கள் முதல், பெரிய நிறுவனங்கள் வரை இவர்களின் தேவையின்றி இயங்க இயலாது.
குறிப்பாக, பெண்கள் திருமணத்திற்கு பிறகு வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கவும், இதில் வாய்ப்புகள் உள்ளன. கைநிறைய சம்பளம் வழங்கும் இத்துறையை, மாணவர்கள் தைரியமாக தேர்வு செய்து படிக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

