/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பின்தங்கிய மக்களுக்கு உயர்தர கண் சிகிச்சை'
/
'பின்தங்கிய மக்களுக்கு உயர்தர கண் சிகிச்சை'
ADDED : ஜூலை 01, 2024 01:21 AM
சங்கரா கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் ரமணி, டாக்டர்களுக்கு மருத்துவ தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
1978ம் ஆண்டு கோவையில் சிறிய மருத்துவமனையாக துவக்கப்பட்ட சங்கரா கண் மருத்துவமனை, இன்று பெரிய அளவில் வளர்ந்து, நாடெங்கும் 14 சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவ மனைகளுடன் இந்தியாவின் கண் சிகிச்சை அளிக்கும், மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
குறிப்பாக சங்கரா கண் மருத்துவமனையின், குறிக்கோள், பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மக்களுக்கும் உயர்தர மருத்துவ சேவையை அளித்து, அனைவருக்கும் சிறந்த கண் பார்வை பெற்றிட செய்வதே ஆகும். எங்களது அனைத்து மருத்துவமனைகளிலும் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, பலவித கண் அறுவை சிகிச்சைகளைத் மேற்கொள்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.