/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடிகளில் அதிக காலிப்பணியிடம்; கேள்விக்குரியதாகிறது குழந்தைகள் பாதுகாப்பு

ADDED : ஆக 04, 2024 10:57 PM

தொண்டாமுத்துார் : தொண்டாமுத்துார் வட்டாரத்தில், மொத்தம் 78 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பல அங்கன்வாடி மையங்கள், அரசு துவக்கப்பள்ளி வளாகத்திலும், சில மையங்கள் தனியாகவும் உள்ளன.
ஒவ்வொரு மையத்திற்கும், ஒரு பொறுப்பாளர் மற்றும் ஒரு உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும். தொண்டாமுத்துார் வட்டாரத்தில், கடந்த, ஓராண்டாக அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளன. தற்போது, 78 அங்கன்வாடி மையங்களுக்கு, 68 பொறுப்பாளர்களும், 62 உதவியாளர்களே உள்ளனர். 25 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், ஒரு மையத்தில் இருப்பவர்கள், இரண்டு மையங்களை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. சில மையங்களில், அங்கன்வாடி பொறுப்பாளர்கள் இல்லாததால், உதவியாளர்களே அங்கன்வாடி மையங்களை கவனித்து வருகின்றனர்.
ஒரே வளாகத்தில் இருக்கும், இரு மையங்களை கவனிக்கும் பொறுப்பாளர்கள், இரண்டு மைய குழந்தைகளையும், ஒரே மையத்தில் வைத்து கவனித்து வருகின்றனர்.
பெயரளவிற்கு மட்டும், இரண்டு மையங்களையும் திறந்து வைக்கின்றனர். இதில், ஒரு மையம் எப்போதும் வெறிச்சோடியே காணப்படுகிறது.
இதனால், பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகி வருகிறது.
எனவே, அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை, விரைந்து நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.