/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி
/
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி
ADDED : மே 10, 2024 01:25 AM
கோவை:அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு, உயர்கல்வி வழிகாட்டி குறித்த பயிற்சி துவங்கியது.
பிளஸ் 2 தேர்வு மே 6ம் தேதி வெளியான நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளன. இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில், எந்த துறையைத் தேர்ந்தெடுப்பது, எந்த துறையைத் தேர்ந்தெடுத்தால் எதிர்காலத்தில் ஜொலிக்கலாம், என்னென்ன புதிய துறைகள் உள்ளன என்பது குறித்தும், தேர்வு எழுதாத மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மேற்கொண்டு தேர்வு எழுதச் செய்வது, அவர்களுக்கு வழிகாட்டுவது மற்றும் ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி வழங்கப்படவுள்ளது.
கோவை மாவட்டத்தில், 113 அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் உள்ள தலைமை ஆசிரியர், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் ஒன்று அல்லது இருவர், என்.எஸ்.எஸ்., தன்னார்வலர்கள் 2 பேர், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர், முன்னாள் மாணவர்கள் 5 பேர் என மொத்தம் 13 பேருக்கு, மாவட்ட கல்வி நிர்வாகம் சார்பில், இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அடுத்தபடியாக, மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும் என்று, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.