/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாட்டுக்கோழி வளர்ப்பில் அதிக வருமானம் பெறலாம்; கால்நடைத்துறை பேராசிரியர் தகவல்

ADDED : பிப் 25, 2025 11:52 PM
அன்னுார்; தமிழக அரசு, 50 சதவீத மானியத்தில், நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அன்னுார் ஒன்றியத்தில், இத்திட்டத்தில் 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு அன்னுார் கால்நடை மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் நடந்தது.
மண்டல இணை இயக்குனர் ராஜாங்கம் தலைமை வகித்தார்.சரவணம்பட்டி, கால்நடை மருத்துவ பல்கலை பேராசிரியர் ஆறுமுகம் பேசுகையில், ''தேசிய அளவில் எடுக்கப்பட்ட ஆய்வில், ஒரு மாதத்திற்கு 15 முட்டைகள் ஒருவருக்கு தேவை என கண்டறியப்பட்டது. ஆனால் இதில் பாதி அளவு முட்டை தான் உட்கொள்ளப்படுகிறது.
இதே போல் இறைச்சியும் தேவைக்கு குறைவாகவே உட்கொள்ளப்படுகிறது. எனவே முட்டை மற்றும் நாட்டுக்கோழி இறைச்சிக்கு தேவை அதிகரிக்கும். கோழி குஞ்சு வளர்க்கும்போது, முதல் 15 நாட்கள் காய்ச்சி ஆறிய நீரை தரவேண்டும். மூன்று மாதங்களில் விற்பனை செய்யலாம். நாட்டுக்கோழி ஒரு கிலோ 700 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை, விற்பனை ஆகிறது. நாட்டுக்கோழி முட்டை குறைந்தது, 12 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே நாட்டுக் கோழி வளர்ப்பில் நல்ல வருமானம் பெறலாம்,'' என்றார்.
உதவி இயக்குனர்கள் இளங்கோ, சரவணன், கால்நடை உதவி மருத்துவர்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.