/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்துஸ்தான் கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
இந்துஸ்தான் கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : மே 07, 2024 12:10 AM
கோவை:இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின், 22வது பட்டமளிப்பு விழா கல்லுாரிக் கலையரங்கத்தில் நடந்தது.
அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் அறிஞர் வினய்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், ''நேர்மறையான சிந்தனைகளை மாணவர்கள் வளர்க்க வேண்டும்.
எந்த வேலையையும் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். சமூக வளர்ச்சிக்கு உதவும் புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் உருவாக்க வேண்டும்'' என்றார்.
தொடர்ந்து விருந்தினர் மற்றும் கல்லுாரியின் செயலர் சரஸ்வதி ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். விழாவில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
கல்லுாரியின் செயலர் சரஸ்வதி, நிர்வாகச் செயலர் பிரியா, முதன்மை நிர்வாக அலுவலர் கருணாகரன், முதல்வர் பொன்னுசாமி, துறை தலைவர்கள், பேராசிரியர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.