/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களை மெருகேற்றும் இந்துஸ்தான் கல்லுாரி
/
மாணவர்களை மெருகேற்றும் இந்துஸ்தான் கல்லுாரி
ADDED : மார் 22, 2024 08:35 PM
கோவையின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் கல்விக் குழுமம், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக, சிறப்பான கல்விச் சேவையை வழங்கி வருகிறது.
இதன் கீழ், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, தொழில்நுட்பக் கல்லுாரி, ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர், பாலிடெக்னிக், நர்சிங் மற்றும் இந்துஸ்தான் மெட்ரிக் மற்றும் சர்வதேச பள்ளிகள் என 13 கல்வி நிறுவனங்கள் செயல்படுகிறது. இந்துஸ்தான் கல்வி குழுமம், சர்வதேச தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகள் வாயிலாக மாணவர்களை மெருகேற்றி, அனைத்துத் துறைகளிலும் சிறந்தவர்களாக வடிவமைக்கிறது. தன்னாட்சி பெற்று கல்லுாரிகளை பெற்ற இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள், டி.சி.எஸ்., ஐ.பி.எம்., கூகுள், எச்.பி., ராயல் என்பீல்ட், மேக் போன்ற நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்வாயிலாக, அந்த நிறுவனங்களில் பணிபுரியும் வல்லுனர்கள் மூலம் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள 13க்கும் மேற்பட்ட பல்கலைகளுடன், ஒப்பந்தம் செய்து மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
போட்டிகள் நிறைந்த உலகில் மாணவர்களை அனைத்து விதங்களிலும் தகுதியுள்ளவர்களாக, இந்துஸ்தான் கல்வி குழுமம் மேம்படுத்துகிறது. கல்வியில் மட்டுமின்றி கலை, விளையாட்டு, நிறுவனம், அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி என அனைத்து துறைகளிலும் இந்துஸ்தான் மாணவர்கள் முத்திரை பதித்து, சாதித்து வருகின்றனர்.
கல்விக்கட்டணம் செலுத்த சிரமப்படும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு, இலவசம், கட்டண சலுகை வழங்கும் பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
சமீபத்தில் தேசியத் தர மதிப்பீட்டு நிறுவனமான நாக், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு, அதிக மதிப்பெண்களுடன், ஏ பிளஸ் பிளஸ் அந்தஸ்தை வழங்கி சிறப்பித்துள்ளது.

