/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டுக்கு காப்பீடு ரொம்ப முக்கியம்
/
வீட்டுக்கு காப்பீடு ரொம்ப முக்கியம்
ADDED : மே 11, 2024 12:44 AM

நாம் புதியதாக கட்டும் வீட்டில் எதிர்பாராத விதமாக ஏற்படும் தீ, திருட்டு, இயற்கை பேரழிவுகள் போன்ற ஆபத்துகள் ஏற்பட்டாலும், நமக்கு பாதுகாப்பு அளிப்பதுதான், வீட்டுக்கான காப்பீடாகும்.
இது எதிர்பாராமல், நம் வீடுகளுக்கு ஏற்படும் இயற்கை பேரழிவினால் ஏற்படும் இழப்புகளின் போது, நமக்கு மிகுந்த மன அமைதியையும், மன உறுதியையும் அளிக்கும்.
நம் வீட்டில் ஏற்படும் பாதிப்பால், நமக்கு அறிமுகமில்லாத மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும் பயனளிக்கும். நம் வீட்டுக்கு ஏற்படும் பாதிப்பிற்கும், சேதங்களுக்கும் முழுமையான நிவாரணத்தை வழங்குகிறது.
இது நிதி தாக்கத்தை குறைப்பதோடு, குறிப்பிடத்தக்க செலவுகளையும் தவிர்க்கிறது. சொத்துக் காப்பீட்டு பிரீமியங்களுக்கு, கேஷ்பேக் கிரெடிட் கார்டுகளை கூட பயன்படுத்தலாம்.
இந்த வகை காப்பீடுகளுக்கு, வீட்டுக்கடன் வழங்கும் பெரும்பான்மையான வங்கிகள் மற்றும் முன்னணி காப்பீட்டு நிறுவனங்கள் வீடுகளுக்கான இன்சூரன்ஸ் திட்டங்களை செயல்படுத்துகிறது.