/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சளி விட்டு விலக வீட்டு வைத்தியம்
/
சளி விட்டு விலக வீட்டு வைத்தியம்
ADDED : ஜூன் 30, 2024 11:01 PM
மழைக்காலங்களிலும், குளிர்காலங்களிலும், வெயில் காலங்களில் வியர்வையானாலும் பெரும்பாலானோருக்கு சளி பிடிக்கிறது.
சளி பிடிப்பதற்கான முக்கிய காரணம், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் தான். அதிலும் பெரும்பாலும் வைரஸ் தொற்றுதான் சளியை ஏற்படுத்தும். இதில் இருந்து தப்பிக்க, சில வீட்டு வைத்தியம்:
*உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது.
*மஞ்சல், கல் உப்பை நீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது.
*ஹெர்பல் டீ, சூப் அடிக்கடி குடிப்பது.
*சுடு நீரில் எலுமிச்சை சாறை விட்டு, தேன் சிறிது சேர்த்து குடிக்கலாம்.
*மிளகு, மஞ்சள் துாளை பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர மார்பு சளி கரையும்.
*துாங்கும் போது தலையை உயர்த்தி வைப்பது.
*நெஞ்செரிச்சல், தொண்டையில் எரிச்சல் ஏற்படுத்தும் உணவு தவிர்ப்பது.
*புகைபிடிப்பதை விட்டுவிடுவது.
*பால் பொருட்களை தவிர்ப்பது.
*அதிமதுரம் வேர், பெர்ரி, மாதுளை, கொய்யா தேநீர், துத்தநாகம் நிறைந்த உணவு, சளியை வெளியேற்ற உதவும்.