/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று ஹோமியோபதி மருத்துவ கண்காட்சி
/
இன்று ஹோமியோபதி மருத்துவ கண்காட்சி
ADDED : மார் 02, 2025 04:12 AM
கோவை : கோயம்புத்துார் ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கம் சார்பில், மெகா ஹோமியோபதி கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாம், இன்று நடக்கிறது.
இக்கண்காட்சியில், 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
பல்நோக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு களுக்கும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவர் மாதேஸ்வரன், கோயம்புத்துார் ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கத்தின் ஆலோசகர் மற்றும் தலைவர் டாக்டர் தாமரை செல்வன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அவிநாசி ரோடு, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியில் காலை, 9:00 மணி முதல் முகாம் நடக்கிறது என, கோயம்புத்துார் ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் சாமுவேல் தெரிவித்துள்ளார். அனுமதி இலவசம்.