/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொலை வழக்கு தலைமறைவு குற்றவாளி ஆஜராக உத்தரவு
/
கொலை வழக்கு தலைமறைவு குற்றவாளி ஆஜராக உத்தரவு
ADDED : மே 10, 2024 01:25 AM
கோவை:கொலை வழக்கில், 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் குற்றவாளி, கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த பா.ஜ., பிரமுகர் சிவக்குமார், 1991 செப்., 5ல், மில் ரோடு அருகே சென்ற போது கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தை சேர்ந்த ஜாகீர் உசேன், சாகுல் அமீது, ஊம்பாபு, முஜ்பூர் ரகுமான், சபூர் ரகுமான், பிலால் ஹாஜியார், ஹாரன் பாஷா, சுபேர், பாஷா, தாஜூதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாரமேட்டை சேர்ந்த முஜ்பூர் ரகுமான், 1997, ஜன., 31ல் ஜாமினில் வெளியே வந்தவர் கோர்ட்டில் ஆஜராகாமல், 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கிறார். போலீசாரால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால், ஜே.எம்:5, கோர்ட் உத்தரவின் பேரில், தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு,பொது இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 22 ம் தேதிக்குள் கோவை, ஜே.எம்:5, கோர்ட்டில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.