/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவைப்புதுார் சாலையில் சண்டையிட்டுக் கொள்ளும் குதிரைகள்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
கோவைப்புதுார் சாலையில் சண்டையிட்டுக் கொள்ளும் குதிரைகள்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கோவைப்புதுார் சாலையில் சண்டையிட்டுக் கொள்ளும் குதிரைகள்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கோவைப்புதுார் சாலையில் சண்டையிட்டுக் கொள்ளும் குதிரைகள்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 16, 2024 12:00 AM

பாதி சாலை வரை பைக்குகள்
சங்கனுார், 31வது வார்டு, பெரியசாமி லே-அவுட், இரண்டாவது வீதியில், சாலையோரம் அதிகளவு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. பாதி சாலை வரை நிறுத்தப்படும் பைக்குகளால், கார் போன்ற வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. சூயஸ் குழாய் பதிப்புக்கு பின்பு, சாலையும் சீரமைக்கப்படாமல் உள்ளது.
- அரவிந்த், சங்கனுார்.
குழியை சீரமைக்கணும்
கோவை மாநகராட்சி, 41வது வார்டு, கருப்பராயன் கோவில் அருகே, பெரிய குழி ஒன்று உள்ளது. குழியால் தினமும் சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் அதிகளவு விபத்துகள் நடக்கிறது. பெரிய விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படும் முன் குழியை சீரமைக்க வேண்டும்.
- தமிழ் ரவி, 41வது வார்டு.
கற்குவியலும், காரும்
ராமநாதபுரம், ஒலம்பஸ், 80 அடி ரோட்டில், சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. சாலையில் ஆங்காங்கே கற்குவியலும் காணப்படுகிறது. சாலையில் வாகனங்கள் செல்லவும், நடந்து செல்லவும் கூட மிகவும் சிரமமாக உள்ளது.
- சரவணன், ராமநாதபுரம்.
திறந்த நிலை சாக்கடை
அவிநாசி ரோடு, நவஇந்தியா, ரேடிசன் புளூ ஓட்டல் எதிரே, நடைபாதையில் பாதாள சாக்கடை மூடியில்லாமல் திறந்தநிலையில் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விழுவதற்கு வாய்ப்புள்ளது. விரைந்து சிலாப் கொண்டு திறந்தநிலையில் உள்ள பாதாள சாக்கடையை மூட வேண்டும்.
- மலர், நவஇந்தியா.
அடிக்கடி விபத்து
சிங்காநல்லுார், 55வது வார்டு, வசந்தா மில் ரோட்டில் பல இடங்கள் பள்ளங்களாக உள்ளது. நடந்து செல்வோர் மற்றும் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்படுவதால் பள்ளங்களை விரைந்து சீரமைக்க வேண்டும்.
- சரவணவேல், சிங்காநல்லுார்.
மண் சாலையால் அவதி
சுண்டக்காமுத்துார், குறிஞ்சி நகர் பகுதியில், தார் சாலை வசதி அமைத்து தரக்கோரி பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை. மண்ணாக இருக்கும் சாலை மழைக்காலங்களில் பயன்படுத்தவே முடியவில்லை. விரைந்து, இப்பகுதிக்கு தார் சாலை வசதி அமைத்து தர வேண்டும்.
- தனலட்சுமி, குறிஞ்சிநகர்.
நாய்களால் அச்சுறுத்தல்
பொன்னையராஜபுரம், 73வது வார்டு, இரண்டாவது வீதியில், பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றுகின்றன. வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. சாலையில் நடந்து செல்வோர், பைக்கில் செல்வோரை நாய்கள் துரத்தி அச்சுறுத்துகின்றன.
- தங்கவேல், பொன்னையராஜபுரம்.
விபத்தை தடுக்க தடுப்புகள்
மதுக்கரை மெயின் ரோடு, காமராஜர் நகர் பகுதியில், இணைப்புச் சாலையில் இருந்து வாகனங்கள் கடப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. அடிக்கடி சின்ன, சின்ன விபத்துகள் நடக்கிறது. இதைத் தடுக்க சாலை நடுவே தடுப்புகள் வைக்க வேண்டும்.
- கார்த்திக், சுந்தராபுரம்.
சாலையில் ஓடும் குதிரைகள்
கோவைப்புதுார், 90வது வார்டு, சாலையில் திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. சாலையில் 10க்கும் மேற்பட்ட குதிரைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்கின்றன. உரிமையாளர்களிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- வேலுமணி, கோவைப்புதுார்.
நொய்யலில் கலக்கும் சாக்கடை
வேடப்பட்டி, காளம்பாளையத்தில் சில இடங்களில் நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது. திறந்தநிலையில் ஓடும் சாக்கடை நீர், நேரிடையாக ஆற்றில் விடப்படுகிறது. அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வேல்ராஜ், வேடப்பட்டி.

