/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடர் மழையிலிருந்து பயிர்களை காக்க தோட்டக்கலை துறை அறிவுரை
/
தொடர் மழையிலிருந்து பயிர்களை காக்க தோட்டக்கலை துறை அறிவுரை
தொடர் மழையிலிருந்து பயிர்களை காக்க தோட்டக்கலை துறை அறிவுரை
தொடர் மழையிலிருந்து பயிர்களை காக்க தோட்டக்கலை துறை அறிவுரை
ADDED : மே 22, 2024 01:05 AM
தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், தொடர் மழையிலிருந்து, பயிர்களை காக்க தோட்டக்கலை துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
தொண்டாமுத்தூர் வட்டார பகுதியில் கடந்த, 10 நாட்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழையால், பயிர்கள் பாதிக்கப்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை, தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தொண்டாமுத்தூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நந்தினி கூறியுள்ளதாவது:
மலைப்பொழிவு சீரான இடைவெளியில், கிடைக்கப்பெறாமல் அதிகளவு பெய்யும் போது பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய் பயிர்களை முறையாக மண் அணைப்பது மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்துவதன் மூலம், நீர் தேக்கத்தினால் வேர் அழுகுவதை தவிர்க்கலாம். காய்கறி பயிர்களில் காய்ந்து, அழுகிய இலைகளை அகற்ற வேண்டும்.
பந்தல் காய்கறி பயிர்களுக்கு மண் அணைப்பது, வலுவிழந்த பகுதிகளில் கூடுதல் ஊன்றுகோல்கள் அமைத்து, பந்தல் சாயாதவாறு தடுக்க வேண்டும்.
மா, கொய்யா, நெல்லி மற்றும் கோகோ போன்ற பயிர்களில், காய்ந்த மற்றும் தேவையற்ற இலைகளை கவாத்து செய்வதன் மூலம், மரத்தின் சுமையை குறைக்கலாம். கவாத்தின் போது, வெட்டப்பட்ட பகுதிகளில், ஒரு லிட்டர் தண்ணீரில், காப்பர் ஆக்சி குளோரைடு 300 கிராம் கலந்து பூசுவதன் மூலம் பூச்சி, நோய் தாக்குவதை தவிர்க்கலாம்.
டிரைகோடெர்மா விரிடி, 4 கிராம், சூடோமோனஸ் 10 கிராம் ஒரு கிலோ தொழு உரத்தில் கலந்து, தோட்டக்கலை பயிர்களுக்கு இடலாம். அல்லது அவற்றை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இதன் மூலம் வேர் அழுகல் நோயை தவிர்க்கலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

