ADDED : ஏப் 26, 2024 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்:சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரிமலை கொடுவாய் ரோட்டை சேர்ந்தவர் பன்னீர் செல்வம், 62, விவசாயி.
இவர் கடந்த, 21ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, மனைவியுடன் திருவண்ணாமலை சென்றார். 25ம் தேதி மதியம் ஊர் திரும்பினார்.
வீட்டுக்கு சென்றபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இரு பீரோக்களில் துணிகள் கலைந்துகிடந்தன.
மற்றொரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த, தங்க செயின், வளையல், கம்மல் என, 11 சவரன் நகை திருடப்பட்டது தெரிந்தது.
புகாரின்பேரில், சுல்தான்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

