/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கனவு இல்லம்' திட்டத்தில் 29 பேருக்கு வீடு
/
'கனவு இல்லம்' திட்டத்தில் 29 பேருக்கு வீடு
ADDED : ஆக 13, 2024 01:24 AM

சூலுார்;கோவை தெற்கு மாவட்டம் சூலுார் தொகுதி சுல்தான் பேட்டை மேற்கு ஒன்றியம் அப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள, 31 பேருக்கு ஒரு ஆண்டுக்கு முன் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
வீடு கட்ட முடியாமல் இருந்த அவர்களில், 29 பேருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட அனுமதி கிடைத்துள்ளது. அதற்கான உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது.
இந்நிகழ்வில் அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராஜேந்திரன், துணைத் தலைவர் ராஜேந்திரன், வார்டு உறுப்பினர் ரமேஷ் குமார் ,வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர் பாட்ஷா, ஒன்றிய மேற்பார்வையாளர் தங்கம், சுல்தான் பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க., அவைத்தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி செயலர் திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

