/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ ராமானுஜா நகரில் வீட்டுமனை விற்பனை
/
ஸ்ரீ ராமானுஜா நகரில் வீட்டுமனை விற்பனை
ADDED : ஜூலை 10, 2024 01:47 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி - உடுமலை ரோடு கெடிமேட்டில் அமைந்துள்ள, ஸ்ரீ ராமானுஜா நகரில் வீட்டுமனை விற்பனையை, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் துவக்கி வைத்தார்.விழாவில், நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, அக்னீஷ் முகுந்தன், பிரவீன் ஜெயராமன் மற்றும் வீராசாமி, நீலகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிர்வாகிகள் கூறுகையில், 'டி.டி.சி.பி., ரெரா ஆகியவற்றுடன், கெடிமேடு ஸ்ரீ ராமானுஜா நகர் உள்ளது. இதன் அருகில், மத்திய அரசின் ஒப்புதலோடு சர்வதேச தரத்தில் வி.வி.டி.என்., ஐ.டி., பார்க், ரயில்வே கூட் ெஷட் ஆகியவை அமைய உள்ளது. நகரில், தார்சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிவுநீர் செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வீட்டுக்கடன் வாங்குவதற்கு வங்கிக்கடன் வசதி செய்து தரப்படுகிறது. திறப்பு விழா அன்று வீட்டு மனை வாங்கியவர்களுக்கு தங்க காசு வழங்கப்பட்டது,' என்றனர்.