/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகள்; குழாய் இணைப்பு துண்டிப்பு
/
குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகள்; குழாய் இணைப்பு துண்டிப்பு
குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகள்; குழாய் இணைப்பு துண்டிப்பு
குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகள்; குழாய் இணைப்பு துண்டிப்பு
ADDED : மார் 05, 2025 10:45 PM
மேட்டுப்பாளையம்; நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின், வீடுகளின் குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்படும் என, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா அறிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. நகரில் வீட்டு வரி, சொத்து வரி, நகராட்சி கடைகளின் வாடகை மற்றும் குடிநீர் கட்டணம் வசூல் செய்யும் பணியானது தீவிரமாக நடைபெறுகின்றன. நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் மட்டும் குடிநீர் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குடிநீர் கட்டணம், வரிகள் ஆகியவற்றை நிலுவையில் வைத்துள்ள, வீடுகளின் குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிப்பு நடவடிக்கையில், நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
நகராட்சி கமிஷனர் அமுதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வரிகள் மற்றும் குடிநீர் கட்டணங்களை நிலுவையில் வைத்துள்ள, 15 வீடுகளின் குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. எனவே பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வீட்டு வரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றை உடனடியாக நகராட்சியில் செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
தவறும் பட்சத்தில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி போன்ற சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு, ஒத்துழைப்பு கொடுத்து வரிகள் மற்றும் குடிநீர் கட்டணம் உடனே செலுத்த வேண்டும். இவ்வாறு, கமிஷனர் கூறியுள்ளார்.