/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் உள்கட்டமைப்பு எப்படி இருக்கு!
/
பள்ளிகளில் உள்கட்டமைப்பு எப்படி இருக்கு!
ADDED : ஆக 07, 2024 10:50 PM
பொள்ளாச்சி : பள்ளிகளில், உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் விபரத்தை, உரிய போட்டோவுடன் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்ய தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, அரசு பள்ளிகளில், முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக நிதி பெறப்பட்டு, கழிவறை கட்டுதல், குடிநீர் குழாய் சீரமைத்தல், வகுப்பறை மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதுதவிர, சில பள்ளிகளில், தன்னார்வ அமைப்பு வாயிலாக ஸ்மார்ட் கிளாஸ், ஸ்மார்ட் போர்டு வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஐகோர்ட் உத்தரவுப்படி, அதற்கான வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான அறிக்கை, பள்ளிகளுக்கு அனுப்பியும் வைக்கப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பள்ளி உட்கட்டமைப்பு பணிகளை பொறுத்தவரையில், பொதுப்பணித்துறையின் கட்டுமான விதிமுறைகள் மற்றும் தர நிர்ணயங்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
முதன்மைக் கல்வி அலுவலகம் வாயிலாக பெறப்படும் நிதியைக் கொண்டு, பள்ளி அளவில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த விபரத்தை, போட்டோவுடன் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஸ்மார்ட் கிளாஸ், ஸ்மார்ட் போர்டு உள்ளிட்ட பள்ளிக்கு தேவையான பொருட்களைப் பெறும்போது, அதற்கான விபரத்தை பதிவேட்டில் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.