/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியில் வழங்கும் சத்துணவின் தரம் எப்படியிருக்கு? சமூக தணிக்கை குழுவினர் ஆய்வு
/
பள்ளியில் வழங்கும் சத்துணவின் தரம் எப்படியிருக்கு? சமூக தணிக்கை குழுவினர் ஆய்வு
பள்ளியில் வழங்கும் சத்துணவின் தரம் எப்படியிருக்கு? சமூக தணிக்கை குழுவினர் ஆய்வு
பள்ளியில் வழங்கும் சத்துணவின் தரம் எப்படியிருக்கு? சமூக தணிக்கை குழுவினர் ஆய்வு
ADDED : ஜூலை 13, 2024 01:33 AM

பொள்ளாச்சி,பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சமூக தணிக்கை குழுவினர் ஆய்வு செய்ததுடன், சிறப்பு வார்டு சபை கூட்டம் நடந்தது.
பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சத்துணவு திட்டம் குறித்து சமூக தணிக்கை குழு ஆய்வு செய்தது. சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி வரவேற்றார்.
பள்ளி மாணவியரிடம் விசாரணை மேற்கொண்டு பள்ளியில் தரமான சத்துணவு வழங்கப்படுவது குறித்தும், சத்துணவின் தரம், பல்வேறு அலுவல் பணிகள் குறித்து கேட்டறியப்பட்டது.
சத்துணவில் முட்டை பெறாத மாணவியருக்கு, மாற்று ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.
பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளையும், சுகாதார குடிநீர் வழங்கப்படுகிறதா என்பதையும் பார்வையிட்டனர். மாணவியர் உபயோகப்படுத்தும் கழிப்பிட வசதிகள், கழிப்பிட சுகதாாரம் குறித்தும் கேட்டறிந்தனர்.
பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாணவியரின் பெற்றோர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், நகராட்சி மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய ஏழு பேர் கொண்ட குழு தணிக்கை பணிகளை மேற்கொண்டது.
அதன்பின், வகுப்பறைக்கு சென்று மாணவியரிடம் குறைகள் கேட்கப்பட்டன. மாணவியருக்கு வழங்கும் உணவை, ஆசிரியர்கள் வெளிப்படைத்தன்மையாக பரிசோதித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
சிறப்பு வார்டு சபை கூட்டத்தில், பள்ளி சத்துணவு வளர்ச்சி குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இரவு காவலர் நியமிப்பது, கூடுதலாக சமையலர், துாய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தை சுற்றி வளர்ந்துள்ள முட்புதரை அப்புறப்படுத்தவும், சத்துணவு கூடத்தை சுற்றி காய்கறி தோட்டங்கள் அமைக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வால்பாறை
வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், சமூக தணிக்கை குழு சிறப்பு வார்டு சபைக்கூட்டம் நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் வரவேற்றார். நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதோடு, இடை நிற்றலையும் தவிர்க்க வேண்டும். பள்ளியை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். மாணவர்கள் நலன் கருதி கூடுதலாக கழிப்பிடம் கட்ட வேண்டும்.
குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், பள்ளியில் கூடுதலாக குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சமூக தணிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

