/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டின் தரம் எப்படி உள்ளது; கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
/
ரோட்டின் தரம் எப்படி உள்ளது; கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
ரோட்டின் தரம் எப்படி உள்ளது; கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
ரோட்டின் தரம் எப்படி உள்ளது; கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
ADDED : மே 19, 2024 10:47 PM

சூலூர்:சூலூரில் புதிதாக போடப்பட்ட ரயில்வே பீடர் ரோட்டின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சூலூர் ரயில்வே பீடர் ரோடு சமீபத்தில் புதிதாக போடப்பட்டது. ரோட்டின் தரம் குறித்து சேலம் தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர் செல்வம் தலைமையிலான குழுவினர் தணிக்கை செய்தனர். நவீன கருவி மூலம் ரோட்டில் துளையிடப்பட்டு, எடுக்கப்பட்ட கட்டியை ஆய்வு செய்தனர். தார் உள்ளிட்ட பொருட்கள் முறையாக உள்ளனவா என, பரிசோதிக்கப்பட்டது. கோவை கோட்ட பொறியாளர் கட்டுமானம் (ம) பராமரிப்பு பிரசன்ன வெங்கடேசன், தேசிய நெடுஞ்சாலை கோவை கோட்ட பொறியாளர் தனபால், தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.