ADDED : மே 29, 2026 03:00 PM
* சிமென்ட் தரத்தை எப்படி அறிவது?
–வரதராஜன்: நல்ல சிமென்ட் பச்சை கலந்த சாம்பல் நிறத்துடன் இருக்கும். மென்மையாக இருக்கும். நீரில் போட்டால், நல்ல சிமென்ட் சில வினாடிகள் மிதந்து பிறகு மெதுவாக கீழே செல்லும்.
* பேஸ்மென்ட் மெட்டல் கான்கிரீட்டிற்கு பதிலாக கம்பி கட்டி கான்கிரீட் போடுவதால் என்ன நன்மை?
–வடிவேல்: ஆர்.சி.சி.கட்டுமானம் மண் அழுத்தத்தை தாங்கும்; விரிசல் தடுக்கலாம். நிலத்தடி நீர் மேலே உள்ள இடங்களில் கம்பி கட்டி கான்கிரீட் போடுவது பாதுகாப்பானது. கரையான்களை தடுக்கலாம்.
* வீடுகளில் இன்டீரியர் கப்போர்டு செய்ய ‘கமர்சியல் பிளைவுட்’ அல்லது ‘வாட்டர் புரூப் பிளைவுட்’; எது சிறந்தது?
–சிவசாமி: சமையலறை, குளியலறைகளில் வாட்டர் புரூப் பிளைவுட்டும், உலர்ந்த இடங்களில் கமர்சியல் பிளைவுட்டும் பயன்படுத்தலாம்.
* நிலத்தடி நீர் தொட்டியை ‘சாலிட் பிளாக்’ கொண்டு கட்டலாமா?
–பூபதி: ஆழம் குறைவான, குறைந்த கொள்ளளவு கொண்ட தொட்டிகளில் 6 இன்ச் கனம் அல்லது அதற்கு மேல் உள்ள தொட்டிகளில் சாலிட் பிளாக் பயன்படுத்தலாம். அதிக ஆழம், கொள்ளளவு கொண்ட தொட்டிக்கு சாலிட் பிளாக் கொண்டு கட்டியபிறகு ஆர்.சி.சி., கான்கிரீட் சுவர் அமைப்பது அவசியம். சரியான முறையில் வாட்டர் புரூபிங் செய்வதால் நீர்க்கசிவு ஏற்படாது. நீண்ட நாள் நீடித்திருக்கும்.
–திருமூர்த்தி இணைச் செயலாளர்: கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்(காட்சியா).:
