/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூறாவளி காற்றுக்கு சாய்ந்தன; மரங்கள் ஆழியாறில் வீடுகள் சேதம்
/
சூறாவளி காற்றுக்கு சாய்ந்தன; மரங்கள் ஆழியாறில் வீடுகள் சேதம்
சூறாவளி காற்றுக்கு சாய்ந்தன; மரங்கள் ஆழியாறில் வீடுகள் சேதம்
சூறாவளி காற்றுக்கு சாய்ந்தன; மரங்கள் ஆழியாறில் வீடுகள் சேதம்
ADDED : ஆக 21, 2024 11:47 PM

ஆனைமலை : ஆனைமலை அருகே, ஆழியாற்றில் சூறாவளி காற்று வீசியதால், சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் விழுந்தன.
ஆனைமலை அருகே, ஆழியாறு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது. நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், சூறாவளி காற்று வீசியது. பலத்த காற்றுக்கு ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
ஆழியாறு பூங்கா அருகே நிறுத்தப்பட்ட காரின் மீது, சாலையோரத்தில் இருந்த மரம் விழுந்ததால், கார் முழுவதும் சேதமடைந்தது. இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் மரம் விழுந்தது. அதில், ரஜனி, லதா, ஷாலினி, மெட்டில்டா ஆகியோரின் வீடுகளின் ஆஸ்பெட்டாஸ் சீட் மேற்கூரை, சுவர்கள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமின்றி தப்பினர்.
ஆழியாறு பகுதியில், இடைவிடாமல் அடித்த சூறாவளி காற்றுக்கு தள்ளுவண்டி கடைகளும் சேதமடைந்தன. இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
அருவிக்கு செல்ல தடை
ஆழியாறு அணை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணியர், கவியருவியில் குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில், மழை காரணமாக கடந்த மாதம் வரை கவியருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மழைப்பொழிவு குறைந்ததால் கடந்த, 15ம் தேதி கவியருவி செல்ல சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மழை தீவிரமடைந்ததால், கவியருவியில் காற்றாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து நேற்றுமுன்தினம் அங்கிருந்த சுற்றுலா பயணியர் வெளியேற்றப்பட்டனர். வெள்ளப்பெருக்கு குறையும் வரை கவியருவி தற்காலிகமாக மூடபட்டு, சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
வால்பாறை: கடந்த இரண்டு நாட்களாக, சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்ததால், வால்பாறையில் பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது. சோலையாறுடேம் செல்லும் வழியில் உள்ள உருளிக்கல் எஸ்டேட் பகுதியில், நெடுஞ்சாலைத்துறையில் காலை, 8:10 மணிக்கு மரம் விழுந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறையில் பெய்யும் கனமழையால், சோலையாறு அணைக்கு வினாடிக்கு, 1,575 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,466 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், சோலையாறு, பரம்பிக்குளம் இரு அணைகளும் நிரம்பிய நிலையில் உள்ளன.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):
வால்பாறை - 47, சோலையாறு - 30, பரம்பிக்குளம் - 6, ஆழியாறு - 59, மேல்நீராறு - 67, கீழ்நீராறு - 35, காடம்பாறை - 31, மேல்ஆழியாறு - 32, சர்க்கார்பதி - 15, வேட்டைக்காரன்புதுார் - 8, துாணக்கடவு - 9, பெருவாரிப்பள்ளம் - 10, நவமலை - 8 என்ற அளவில் மழை பெய்தது.